2022 புத்தாண்டு அன்று எழுத்தாளர் ஜெயமோகன் நண்பர்களிடையே ஆற்றிய சிறு உரையின் எழுத்து வடிவம்.
ஓவியர் Edvard Munchன் புகழ்பெற்ற ஓவியங்கள் இரண்டு.. அவர் ஸ்பானிஷ் ஃப்ளுவால் பாதிகப்பட்ட பொழுது, தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து தானே வரைந்த Self Portrait with the Spanish Flu…
மற்றும் ஃப்ளு விலகி, அதன் பாதிப்பு முழுதாக விலகாத பொழுது வரைந்த Self-Portrait after the Spanish Flu என்ற ஓவியம்.
இவை இரண்டும் முக்கியமான கலை சாதனைகளாக கருதப்படுகின்றன. Near death and Revivalயை குறிப்பிடுவதால் இவை resurrection எனவும் குறிப்பிடப்படுகின்றன.
பின்னாளில் ஒரு பேட்டியில், தன்னை ஸ்பானிஷ் ஃப்ளு பாதிக்கவில்லை என்றால், resurrection is possible for human being , எதிலிருந்தும் நம்மால் உயிர்த்தெழ முடியும் என்பதை நான் அறிந்திருக்க மாட்டேன், உயிர்த்தெழுதல் பிறந்தெழுதலை விட பல மடங்கு பெரிய ஆனந்தம் என்கிறார்.
உயிர்த்தெழுதல், அதுவரை நடந்தவற்றை திரும்பி பார்க்க, நாம் தோல் என்றும் உடலென்றும் நினைத்த எவற்றையெல்லாம் கழட்டி போட முடியும் அன அறியவும், நம்முடைய எதையெல்லாம் கழட்டிப் போட இயலாது, எவையெல்லாம் கடைசி வரை கொண்டு போக வேண்டியவை, எவை சாதாரணமானவை என கண்டடையவும் உதவுகிறது.
இந்த நோய் காலத்தில் நாம் மீண்டும் ஊரடங்கிற்குள் செல்லும் வாய்ப்புள்ளது, ஆனால், மருத்துவத்தின் உதவியால், உயிராபத்து இல்லாத உளவியல் நெருக்கடிகளையோ அல்லது தொழில் நெருக்கடிகளையோ சந்திப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். தன்னை தானே introspection செய்துக்கொள்ள, தன்னுடைய அடிப்படை சக்திகளை குவித்து எது நாம், எது நாம் அல்ல என அறியும் ஒரு வாய்ப்பாக இந்த கட்டாய ஓய்வு அமையும்.
இதை டிப்ரஷனாக, சலிப்பாக, நெகட்டிவாக அளவிளாமல் பெருகிக்கொண்டு செல்ல முடியும், அதே சமயம், இதை சர்வைவலுக்கான வாய்ப்பாக, இன்னொரு வகையான வாழ்க்கைக்கான வாய்ப்பாக பார்த்தால் பல திறப்புகள் நம்முன் உள்ளன.
இந்த காலம், பலவகை மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது. மானுட சாதனைகளை மட்டுமே அதிகமாக பேசிய மேலை இலக்கியம், இயற்கையை குறித்து எழுத தொடங்கியுள்ளது. நம்மில் பலருக்கு கிராமம் சார்ந்த, இயற்கை சார்ந்த வாழ்வை அனுபவிக்கும் முதல் வாய்ப்பாக அமைந்தது.
வாழ்வின் எந்த நெருக்கடியுமே, நம்மை நாமே தொகுக்க, எது உண்மையிலேயே நாம்.. எது நாம் அல்ல என் பார்க்க, நம்மை கண்டடைவதற்கான ஒரு வாய்ப்பே.
இந்து மரபு “வாழ்க்கை என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஆத்ம சாக்ஷாத்காரம்.. தன்னை தானே கண்டடைதல், தன்னை தானே நிறைவு செய்தல் என்பதையே பதிலாக அளிக்கிறது. எல்லா செயலும் தன்னை கண்டடைவதாக தான் இருக்க வேண்டும். ஒருவர் தன்னை தானே முழுமையாக கண்டடையும் பொழுது விடுததை அடைகிறான், எப்பொழுதும் அதன் ஏதோ ஒரு படியில் தான் இருக்கான், எல்லா அறிதலும் தன்னை அறிதலே என்பது உபநிஷத்துகள் தரும் ஞானம்.
இந்த காலகட்டம் நாம் நம்மை அறிவதற்கான கால கட்டமாக அமையட்டும் நன்றி!